இந்தத் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பில் பணம் போட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் கிடைக்கும். பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரவும் நிறைய திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் மாத வருமானத் திட்டம் (Monthly Income Scheme - MIS).
ரிஸ்க் இல்லாமல், அதேசமயத்தில், நல்ல லாபமும் அளிக்கும் சேமிப்புத் திட்டம் என்றால். அது போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்தான். ஏனெனில் அவை அபாயம் இல்லாதவை. இங்கு சேமிக்கும் பணம் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால்தான், போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. மாத வருமானத் திட்டத்தைப் பொறுத்தவரையில் வங்கிகளில் கிடைக்கும் வட்டி லாபத்தை விட அதிக லாபம் கிடைக்கிறது.
ரூ.1000
மாத வருமானத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கிறது. 1000 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கு தொடங்கலாம்.
உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே கணக்கு தொடங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.2 லட்சம் பெடாசிட் செய்தால் மாதம் ரூ.1,100 உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல, ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால் 1,925 ரூபாயும், ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் 2,475 ரூபாயும் கிடைக்கும்.
இவ்வாறு மாதம் ரூ.2,500 வரையில் வருமானம் கிடைப்பது, நம்முடைய மற்ற செலவுகளை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் போஸ்ட் ஆபீஸ் மாத வருமானக் கணக்கை மூடிவிடலாம். அப்போது பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!