Others

Tuesday, 16 August 2022 10:55 AM , by: Elavarse Sivakumar

ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதியுதவியாக, ரூ.50,000மும், 8 கிராம் தங்கமும் வழங்கும் புதியத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பு இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம். பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவுவதற்காக தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

8 கிராம் தங்கம்

இத்திட்டத்தின் கீழ் பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

ரூ.25,000

இத்திட்டத்தின் கீழ், 10ஆவது படித்த அல்லது படிப்பறிவில்லாத மணப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

ரூ.50,000

அதேபோல, 12ஆவது மற்றும் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித் தொகையும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தகுதி

மணமகள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல மணமகனுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அப்போதுதான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

40 நாட்களுக்கு முன்பு

திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பு இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, 10ஆவது - 12ஆவது - பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், திருமண அழைப்பிதழ் நகல், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதரவற்றவர் என்பதற்கான சான்று அல்லது பெற்றோரின் இறப்புச் சான்றிதழ் ஆகியவை தேவைப்படும். இந்த ஆவணங்களை வைத்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

மேலும் படிக்க...

சந்தையில் விற்பனையாகும் செக்கச்சிவப்பான போலி செர்ரி!

தொழில் முனைவராக மாற ஆசையா? சிறப்பு பயிற்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)