அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனும் குறைக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அரசின் இந்த திட்டம், மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் மற்றும் சமூகப் பாதுகாப்பு பென்சன் ஆகியவை குறைக்கப்படலாம் என கேரள மாநில அரசு சூசகமாக தெரிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை
கேரள மாநில அரசு எதிர்பார்த்ததை விட 23,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.
காரணம்
கேரள அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்ததாலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாலும் கேரள அரசின் நிதிநிலை பாதிக்கப்படுவதாக நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.
சம்பளம் குறைப்பு?
இதுகுறித்து கேரள நிதியமைச்சர் பி.என்.பாலகோபால் கூறுகையில், உடனடியாக எந்தவொரு பாதிப்பும் இருக்காது. தற்போதைய சூழலில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன், சமூகப் பாதுகாப்பு பென்சன் போன்றவை கிடைக்கும்.
விரைவில்
கேரளாவுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாவிட்டால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் (அக்டோபர் - மார்ச்) நெருக்கடி ஏற்படும் இதனால் கேரளா சுமார் 23,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும்.
சிக்கல்
இதுபோன்ற நெருக்கடி காலத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியர்களுக்கான பென்சன் போன்றவற்றை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். கடன் பெறுவதற்கு வேறு வழிகளை கேரள அரசு ஆராய விரும்புவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...