ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து வகை ஒப்பந்த ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியம் 3,500 வரை உயர உள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு (Allowance Hike)
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசை தொடர்ந்து அரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது அகவிலைப்படி உயர்வையடுத்து ஊழியர்களின் மாத ஊதியம் வெகுவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு அனைத்து வகை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை உயரவுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
புதிய இ-பாஸ்புக் திட்டம் அறிமுகம்: PF பயனர்களுக்கு சூப்பர் வசதி!
அரசு ஊழியர்களுக்குப் பறந்த முக்கிய அறிவிப்பு: இனிமேல் இதற்குத் தடை!