எட்டாவது ஊதியக் குழு விரைவில் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, குறைந்தபட்சம் ரூ.21,000 வரை ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 முறை
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் ஒரு முறையும் ஜூலை மாதத்தில் ஒரு முறையும் திருத்தப்படும். பணவீக்கத்தைப் பொறுத்து இதில் மாற்றம் இருக்கும். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி கணிசமான அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா சமயத்தில் உயர்த்தப்படவில்லை.
34 சதவீதமாக
அகவிலைப்படி உயர்த்தப்படும் போது ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும். இந்நிலையில் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த முறை 5 சதவீதம் அல்லது 6 சதவீத உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.21,000
இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் ஏழாவது ஊதியக் குழுவைத் தொடர்ந்து விரைவில் எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக 8 அல்லது 10 ஆண்டுகள் கழித்தே ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் ஏற்கப்படும். ஆனால் இந்த முறை சீக்கிரமே ஊதியக் குழு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 21,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 மடங்கு
அதேபோல, அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து ஊழியர்களின் சம்பளம் மூன்று மடங்கு வரை உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலும் படிக்க...