நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும் ராணுவத்திற்கு பேருதவி புரியும் வகையில் செயல்படுவது, முப்படைகளில் முக்கியமான விமானப்படையினர்தான். இந்நிலையில், விமானப் படை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள், பலன்கள் வழங்கும் எஸ்பிஐ சம்பளக் கணக்கு திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய விமானப் படை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் வசதிகளுடன் கூடிய சம்பளத் தொகுப்பு திட்டத்துக்காக இந்திய விமானப் படைக்கும், எஸ்பிஐ (SBI) வங்கிக்கும் இடையே ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
சிறப்பு பலன்கள்
இந்நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எஸ்பிஐ வங்கி தற்போது புதுப்பித்துள்ளது. இதன்படி, பாதுகாப்பு துறை சம்பளத் தொகுப்பு (Defence Salary Package) திட்டத்தின் கீழ் விமானப் படை ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சிறப்பு பலன்களும், வசதிகளும் கிடைக்கும்.
பல சலுகைகள்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விமானப் படை தலைமை மார்ஷல் வி.ஆர்.சவுதரி உள்ளிட்ட அதிகாரிகள், எஸ்பிஐ அதிகாரிகள் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது. இந்த சம்பளக் கணக்கு திட்டத்தில் விமானப் படை ஊழியர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன.
சலுகைகள் விபரம்
விபத்துக் காப்பீடு, விமான விபத்துக் காப்பீடு, பணிக்காலத்தில் இறந்தால் கூடுதல் கவரேஜ், விபத்தில் ஊனமுற்றால் இன்சூரன்ஸ் கவர் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. இதுபோக, விமானப் படை ஊழியர் இறந்துவிட்டால் அவரது பிள்ளையின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு கூடுதல் கவரேஜ் கிடைக்கும்.
மேலும் படிக்க...