கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்றோர்கள், ஆயுதப்படை மற்றும் மத்திய துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களது கல்விக்கு உதவும் வகையில் ஏ.ஐ.சி.டி.இ., இந்த உதவித்தொகை (Scholarship) திட்டத்தை செயல்படுத்துகிறது.
தகுதிகள்:
- ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- முழுநேர கல்வியாக பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டுக்குள் தற்போது படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
- அனைத்து ஆதரங்கள் வாயிலாகவும் ஆண்டு குடும்ப வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம், புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்கள் வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை எண்ணிக்கை:
டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் தலா ஆயிரம் மாணவர்கள் வீதம் மொத்தம் 2 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: https://scholarships.gov.in/
மேலும் படிக்க
ஒரு திருக்குறள் சொன்னால் 1 டாலர் பரிசு: புதுகை இன்ஜினியர் அசத்தல்!
9ம் வகுப்பு மாணவனின் அசாத்திய திறமை: ராயல் என்ஃபீல்ட் பாகங்களைக் கொண்டு இ-பைக் தயாரிப்பு!