மும்பையில் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவை இருந்தாலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து கடல்வழி டாக்ஸி திட்டம் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை மற்றும் நவிமும்பை இணைக்கும் கடல்வழி டாக்ஸி திட்டம் இந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக மும்பையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
கடல்வழி டாக்ஸி திட்டம் (Seaway Taxi Scheme)
பயணிகள் தங்கள் போய் சேரும் இடத்திற்கு மிக எளிதாக எந்தவித சிரமமுமின்றி செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இதேபோல் மேலும் பல கடல்வழி டாக்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவின் கடலோரப் பகுதி மக்களின் நீண்டகால விருப்பமான நீர்வழி டாக்சி சேவை முதலில், இரட்டை நகரங்களான மும்பை- நவி மும்பையை இணைக்கும். நீ்ர்வழி டாக்சி சேவை சுற்றுலாவுக்கு குறிப்பாக நவி மும்பையிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க யானைத்தீவு குகைகளுக்குப் பயணம் செய்ய மாபெரும் உத்வேகம் அளிக்கும். மேலும், நவி மும்பையிலிருந்து எளிதாக இந்திய நுழைவாயிலுக்குப் பயணம் செய்ய இயலும்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 50-50 நிதியுடன் ரூ.8.37 கோடி செலவில் பெலாப்பூர் துணைத் துறைமுகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இனி விண்வெளிக்கும் சுற்றுலா செல்லலாம்: ஆரம்பமானது டிக்கெட் விற்பனை!