Others

Friday, 29 April 2022 10:19 AM , by: Elavarse Sivakumar

நம் அணிகலன்களில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம். குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட உறவினர்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகளை அணிந்து செல்வதே, நம்முடையக் கவுரவத்தைக் காட்டும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் வசதி படைத்தவர்கள் எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள். முன்பெல்லாம் விலை குறைவாக இருந்த நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும், தங்கள் சேமிப்பில் தங்கம் வாங்கி மகிழ்ந்தவர்.

ஆனால் தற்போது தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளதால், தங்கம் வாங்குவது தற்போது, ரொம்பக் கஷ்டம் என்ற நிலையே உள்ளது.
குறிப்பாக வரும் மே 3ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நன்நாளில் பொதுமக்கள் அதிகம் தங்கம் வாங்குவது வழக்கம்.

தங்கம் ஏன்?

அட்சய திருதியை நாளில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் அது பல்கி பெருகி செல்வமும், வளமும் வந்து சேரும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவே, பொதுமக்கள் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குகின்றனர். சரி தூய தங்கத்தை எப்படி கண்டுபிடிப்பது?

BSI ஹால்மார்க்

நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானது, அதன் தூய்மை சரிபார்க்கப்பட்டது என்பதற்கு பிஐஎஸ் ஹால்மார்க் (BIS Hallmark) ஒரு சான்று. எனவே தங்கம் வாங்கும் முன் பிஐஎஸ் ஹால்மார்க் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

​நிறம்

தங்கத்தில் வியர்வை அல்லது அழகுசாதன பொருட்கள் பட்டால் தங்கத்தின் நிறம் மாறக்கூடாது. நிறம் மாறினால் அது தூய்மையில்லாத தங்கம்.

​தோல்

தங்க நகை உங்கள் தோலில் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அது சுத்தமில்லாத தங்கம்.

துரு

தூய்மையான தங்கம் துருப்பிடிக்காது. எனவே, நீங்கள் வாங்கும் தங்கம் துருப்பிடிக்காமல் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

​தண்ணீர்

நீங்கள் வாங்கும் தங்கம் தண்ணீரில் மிதந்தால் அது தூய்மையில்லாத தங்கம்.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)