Others

Thursday, 28 April 2022 09:37 PM , by: R. Balakrishnan

Father joins hands with witch to sacrifice daughter!

நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் இன்னும் மறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. புதையலுக்கு ஆசைப்பட்டு, மந்திரவாதி கும்பலுடன் கூட்டு சேர்ந்து, தான் பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்துள்ளார் தந்தை. இவர்களின் செயலை சுதாரித்துக் கொண்ட சிறுமி, அவர்களிடம் இருந்து தப்பித்து சென்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.

புதையல் (Treasure)

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அம்மாவட்டத்தில், பாபுல்காவ் தாலுகாவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய சிறுமி, மட்னி கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்கிப் படித்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமியின் தந்தை, புதையலுக்காக பல நாட்களாகவே வீட்டில், மந்திரவாதிகள் சொல் கேட்டு, சில மாந்திரீக சடங்குகளை செய்து வந்திருக்கிறார்.

நரபலி

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, மந்திரவாதிகளை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். தனது மகளை வைத்தும் சில சடங்குகளை செய்துள்ளார். பிறகு, சிறுமியை நரபலி கொடுக்க முயற்சி செய்துள்ளனர். நரபலியை நடத்தி முடிக்க, சிறுமியின் தந்தை உள்பட, மந்திரவாதி கும்பல் 9 நபர்கள் குழி தோண்டி இருக்கிறார்கள். குழியின் முன்னே, சிறுமியை அமர வைத்து சில சடங்குகளை நடத்தி உள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, தன்னை உயிரோடு நரபலி கொடுக்க முயல்கிறார்கள் என்பதை சுதாரித்துக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி இருக்கிறார். பிறகு, தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார் சிறுமி. நடந்ததை முழுவதுமாக தோழியின் பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறார். இதனைக் கேட்டு அவர்கள் அதிர்ந்து போயினர். பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்த சிறுமியின் தந்தை மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

யவத்மால் மாவட்ட காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை நரபலி கொடுக்க முயற்சி செய்தது உறுதியாகி இருக்கிறது. சிறுமியின் தந்தை மற்றும் மந்திரவாதி உள்பட 9 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட காவல் சூப்பிரண்டு திலீப் புஜ்பால் தெரிவித்துள்ளார். இது போன்ற அதிர்ச்சி சம்பவங்கள், இனி மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க

முதுகுத் தண்டு பாதிப்பும், காரணங்களும்!

குளியலறையில் சமையலறை! சவுதி அரேபியாவில் அதிர்ச்சி சம்பவம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)