இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம். இதை உயர்த்துவதால், கடன் வாங்கியோருக்கான மொத்த விகிதம் உயரும்.
வட்டி உயர்வு (Interest hike)
MCLR வட்டி விகிதம் உயர்வதன் விளைவாக, கடன் செலுத்தி வருவோருக்கு மாத EMI கட்டணமும் உயரும். புதிதாக கடன் வாங்குவோர், ஏற்கெனவே கடன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்துவோர் என இரு தரப்பினருக்குமே EMI கட்டணம் உயரும்.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவல்படி, மூன்று மாதங்கள் வரையிலான கடன்களுக்கு MCLR வட்டி 7.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஆறு மாத கடன்களுக்கு MCLR வட்டி 7.45% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டாவது முறையாக எஸ்பிஐ தனது MCLR வட்டியை உயர்த்தியுள்ளது. இதற்கு முன் ஏற்கெனவே ஜூன் 15ஆம் தேதி எஸ்பிஐ MCLR வட்டியை உயர்த்தியது.
இதனால் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன், டூவீலர் கடன் போன்ற கடன்களுக்கான EMI கட்டணம் உயரும். இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு துரதிருஷ்டவசமான அறிவிப்பாகும். இதனால், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க
ICICI Bank: பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கான வட்டி விகிதம் உயர்வு!
வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!