தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை கணிசமான விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 வரை விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,535 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.20 அதிகரித்து ரூ.5,555 ஆக விற்பனையாகிறது. சவரன் (8 கிராம்) ஒன்றுக்கு ரூ.160 வரை அதிகரித்து ரூ.44,440 ஆகவும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் சற்று கவலையடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் தான் என்பது கூடுதல் தகவல்.
வெள்ளி விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ 80 ஆகவும், கிலோ ஒன்றிற்கு 200 ரூபாய் வரை விலை குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் ஹால்மார்க்கில் சந்தேகமா?
தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும். BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களின் பட்டியல் கீழே உள்ள இணையதளத்தில் இங்கு காணலாம்.
https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.
pic courtesy: unsplash
மேலும் காண்க:
மாதவிடாய் காலத்தில் தயிர்- இவ்வளவு நாளா ஏமாத்துனாங்களா?
சூரியனை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல்-1: சாதித்தது ISRO