கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை காரணத்தால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என்று இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் வருகின்றனர்.
உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை (Gold rate) தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் சரிவையும் கண்டு வருகின்றது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 11 குறைந்து ரூ. 4,440 ஆக விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 88 குறைந்து ரூ. 35,250-க்கு விற்பனையில் இருக்கின்றது. 18 காரட் தங்கம் ரூ. 3,637-க்கும் 14 காரட் தங்கம் ரூ. 2,881-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.00 க்கும் ஒரு கிலோ வெள்ளி 68,000 ரூபாயிலும் விற்பனையில் உள்ளது.
தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்து விற்பனையில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 44,100 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 48,110 என்ற விலையிலும் உள்ளது.
மேலும் படிக்க:
மத்திய அரசின் தங்கமான தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!
ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை! தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு !