ஜாக்கெட் மற்றும் பேண்ட்டில் வைத்துப் பாம்புகள், பல்லிகள் உள்ளிட்ட ஊர்வனத்தைக் கடத்த முயன்ற நபர், எதிர்பாராத வகையில் போலீஸாரின் கைகளில் சிக்கினார். அவர் உடம்பில் இருந்து, 9 பாம்புகள், 43 பல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்காவில் ஊர்வனங்களைக் கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட ஊர்வனங்கள்
ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். அண்மையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி சோதனை செய்தபோது, அந்த நபர் அணிந்திருந்த ஜாக்கெட், பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுமார் 52 பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுக் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பைகளைக் கைப்பற்றித் திறந்துபார்த்தபோது, மிகப்பெரிய அதிர்ச்சிக் காத்திருந்தது. ஏனெனில் அதில் அடைக்கப்பட்டிருந்தவை 9 பாம்புகளும், அரிய வகையைச் சேர்ந்த 43 கொம்பு பல்லிகளும்தான்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஊர்வனங்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளும், பல்லிகளும், மருத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடியவை என்பதால், பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க...