ரேஷன் அட்டை வைத்திருக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை பெற வழிவகுக்கும் ஆயுஷ்மான் அட்டைகளையும் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. இதன்படி, ரேஷன் அட்டைகளைக் காட்டி, மத்திய அரசின், ஆயுஷ்மான் அட்டைகளை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆயுஷ்மான் கார்டையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற சலுகைகளைத் தொடர்ந்து பெற முடியும்.
ரேஷன் கார்டு
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைக்கிறது.
புதிய வசதி
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மற்றுமொரு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆயுஷ்மான் கார்டையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் ஆயுஷ்மான் அட்டைகள் இருக்க வேண்டும் என்பதற்கான இது தொடர்பான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவு
ஆயுஷ்மான் அட்டைகளை பயனாளிக்கு வழங்க சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுச் சேவை மையங்களில் ரேஷன் கார்டைக் காட்டி ஆயுஷ்மான் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளதோடு, அது தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலவச சிகிச்சை
ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் பல்வேறு வகையான வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெறலாம். ஏற்கெனவே இத்திட்டத்தில் பதிவுசெய்த பயனாளிகளுக்கு மட்டுமே புதிய கார்டுகள் வழங்கப்படும் எனவும், பதிவு செய்யாதவர்களுக்கு கார்டு கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!