Others

Wednesday, 09 November 2022 09:20 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்களுக்கு18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை, 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொரோனா சமயத்தில் இந்த அகவிலைப்படி நிலுவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் 3 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுவிட்டது.

எதிர்பார்ப்பு

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் (HRA) எனப்படும் வீட்டு வாடகை அலவன்சும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. எனவே அது எப்போது கிடைக்கும் என்பது தற்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

பரிசீலனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை அகவிலைப்படி நிலுவை உள்ளது. இதை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் எப்போது டெபாசிட் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், இம்மாதம் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான செட்டில்மெண்ட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த 18மாத நிலுவைத்தொகையை 3 தவணைகளாகச் செலுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2 லட்சம் ரூபாய் வரை இந்த அகவிலைப்படிதொகை வழங்கப்பட உள்ளது.

பண்டிகைக்காலம்

பொதுவாகவே, பண்டிகைக் காலங்களில் நாட்டு மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். இதனைக் கருத்தில்கொண்டு, இதற்கான அறிவிப்பை எதிர்நோக்கி 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

ரூ.2000 இனிமேல் கிடையாது- ரிசர்வ் வங்கியின் ஷாக் தகவல்!

பெண் லட்சாதிபதி திட்டம்-ரூ.5 லட்சம் வரைவட்டியில்லாக் கடன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)