Others

Tuesday, 16 August 2022 11:08 AM , by: Elavarse Sivakumar

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை விரைவில் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை ஓய்வூதியதாரர்கள் கேட்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பித்துள்ளது.

எனவே மத்திய அரசு நல்ல முடிவு எடுத்து, விரைவில் அறிவிக்க உள்ளது.
ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பித்துள்ள மனுவில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரிய தொகை டெபாசிட் செய்யப்படும். இந்த 18 மாத நிலுவைத் தொகை குறித்த கோரிக்கையில் ஊழியர்கள் உறுதியாக உள்ளனர்.

எவ்வளவு நிலுவைத்தொகை?

அரசு ஊழியர்களில் நிலை-1 பிரிவு ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம், லெவல்-13 அல்லது லெவல்-14 ஆகியவற்றுக்கு நிலுவைத் தொகை ரூ.1,44,200 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பாரதி பென்ஷனர்ஸ் மஞ்ச் (பிஎம்எஸ்) பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 18 மாத நிலுவைத் தொகை மிகப் பெரிய தொகை என்றும், இதுவே தங்களின் வாழ்வாதாரம் என்றும் ஓய்வூதியதாரர்கள் கூறுகின்றனர்.

எத்தனை காலம்?

2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA/DR நிலுவைத் தொகையை நிதியமைச்சகம் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிப்பு

DA/DR நிறுத்தப்பட்டபோது, சில்லறை பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது என்றும், பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் உச்சத்தில் இருந்ததாகவும் ஓய்வூதியதாரர்கள் வாதிடுகின்றனர்.இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நிலுவைத் தொகையை அரசு நிறுத்தக் கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

சந்தையில் விற்பனையாகும் செக்கச்சிவப்பான போலி செர்ரி!

தொழில் முனைவராக மாற ஆசையா? சிறப்பு பயிற்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)