நம்ம ஊர் இட்லிக்கு பல வரலாறுகள் இருக்கும் நிலையில், இந்த உணவு புதிய வரலாறு படைக்க உள்ளது. இது விரைவில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது, இட்லி தினமான நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. விண்வெளி ஆய்வுக்காக இதுவரை இந்தியாவை பூர்வீகமாக உடைய மூன்று பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். 'ககன்யான்' திட்டம் கடந்த, 1984ல், இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா, அப்போதைய சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலம் வாயிலாக பயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து, இந்தியாவை பூர்வீகமாக உடைய சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா இருவரும், அமெரிக்காவின் 'நாசா' சார்பில் விண்வெளிக்கு சென்றனர்.
விண்வெளியில் இட்லி (Idly in Space)
சமீபத்தில் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்துக்காக, இந்தியாவை பூர்வீகமாக உடைய ராஜா சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், 'ககன்யான்' திட்டத்தின் வாயிலாக மனிதர்களை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதற்காக, நான்கு இந்தியர்களுக்கு, ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தாண்டில் மேற்கொள்ளவிருந்த பயணம், கொரோனா வைரசால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இட்லி தினம் (World Idly Day)
நம் வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது, அவர்களுக்கான உணவுகள் குறித்து, ராணுவ உணவு ஆராய்ச்சி பரிசோதனை மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு தான் இட்லி. எண்ணெய் இல்லாத, மிகவும் வேகமாக செரிக்கக் கூடியது இட்லி. அதனால், விண்வெளி வீரர்களுடன் இட்லியை அனுப்புவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2 ரூபாய் நாணய அளவுள்ள இட்லிகள் அனுப்பப்பட உள்ளன. கூடவே, சட்னியும், சாம்பாரும் உண்டு. சர்வதேச இட்லி தினமான மார்ச் 30ம் தேதி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
விண்வெளி பயணத்துக்கு வீரர்களும் தயாராகிவிட்டனர். கூடவே நம்மூர் இட்லியும் பயணம் செய்ய உள்ளது. இட்லியின் விண்வெளிப் பயணத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க
தமிழகத்திற்கு தேசிய நீர் விருது: நீர் மேலாண்மையில் மூன்றாவது இடம்!
சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்: வானியற்பியல் விஞ்ஞானி எச்சரிக்கை!