அமெரிக்காவின் அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
உயிரிழந்த செஸ்லி கிரிஸ்ட் 2019 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
மாடலிங் துறையில் மிளிரும் இளம்பெண்கள் பிரஞ்ச அழகிப் போட்டிக்காகத் தங்களை தயார்படுத்திக்கொள்வது வழக்கம். அவ்வாறுத் தயாராகும் பெண்கள், மாநில அளவிலான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அழகிப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் நபர், அந்த நாட்டில் அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். இவர் உலக அரங்கில் நடைபெறும் அழகிப் போட்டியில், தன் தாய்நாட்டின் சார்பாகப் பங்கேற்பது வழக்கம்.
தவறி விழுந்து பலி
அவ்வாறு, கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
1991 இல் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஜாக்சன் நகரில் அவர் பிறந்தார். தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் பயின்ற பின், 2017 ஆண்டு வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.அதன் பின் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.இருப்பினும் இந்த அழகியின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மரணத்தில் மர்மம்
அதேநேரத்தில் மற்றொரு செய்தி நிறுவனம், ஜாஸ்லி ரிஸ்ட் தான் வசித்துவந்த 60 மாடி கட்டிடத்தில் இருந்து கிழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஜாஸ்லி கடைசியாகக் கட்டிடத்தின் 29-வது மாடியில் நின்று கொண்டிருந்தபோது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளார். அதன்பின்னர் அவர் எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை. இதனால், அவர் கட்டிடத்தின் 29-வது மாடியில் இருந்தே கிழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தகவல்
தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி ரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனவே இந்த அழகி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறிவிழுந்து உயிரிழந்தாரா? என்பது போலீஸாரின் விசாரணைக்குப் பிறகேத் தெரியவரும்.
மேலும் படிக்க...
தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!
குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!