Others

Tuesday, 23 August 2022 09:24 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகள், தாட்கோ மூலம் கடன் பெறுவதற்கான, வருமான உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, விதிகளில் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

மானியத்துடன் கடன்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக நிறைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக விவசாயிகளின் நலனுக்கு இத்திட்டம் கூடுதல் உதவிகளை வழங்குகிறது.


விதிகளில் தளர்வு

தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்கு சில வரம்புகள் உள்ளன. குடும்ப வருமானம் போன்ற விஷயங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைவரும் பயன்பெறும் வகையில் குடும்ப வருமானம் தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அறிவிப்பை வெளியிட்டார்.

ரூ.3லட்சம்

அதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.” என்று அறிவித்திருந்தார்.

அரசாணை

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை(நிலை)எண்.60, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.26.07.2022இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)