Others

Friday, 01 July 2022 08:17 AM , by: Elavarse Sivakumar

சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட 'பீர்' மதுபானம் குடிமகன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குடி உடல்நலத்திற்கு கேடு என எத்தனைதான் விளம்பரங்களைப் போட்டாலும், மதுபானப் பிரியர்கள் அவற்றை தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்வதே இல்லை. இதனைக் கருத்தில்கொண்டு, எதைக்கொண்டு பீர் தயாரித்தாலும் விற்பனை புதிய உச்சத்தை எட்டும் என எண்ணியிருக்கிறார்கள், இவர்கள்.

புதிய முயற்சி

அதானால்தான் புதிய முயற்சியாக, சாக்கடை நீரில் இந்து சுத்திகரிக்கப்பட்ட பீர் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது.

மேலும் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து 'நியூவாட்டர்' என்ற பெயரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தவிர உப்பு நீரும் குடிநீராக மாற்றப்படுகிறது.

கலக்கல் பீர்

இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம் நியூவாட்டரை பயன்படுத்தி பீர் மதுபானம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீருக்கு சிங்கப்பூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக புருவெர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியப் பங்கு

இது குறித்து புருவெர்க்ஸ் நிறுவன தலைவர் மிட்ச் கிரிபோவ் கூறுகையில் நியூவாட்டரில் பீர் தயாரித்து பார்த்ததில் அது வழக்கமான சுவையுடன் இருந்தது. நீரில் உள்ள தாதுப் பொருட்கள் பீர் தயாரிப்புக்கான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிக்கின்றன'' என்றார்.

மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

7 டன் ரசாயன மாம்பழங்கள் - அதிரடி பறிமுதல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)