Others

Wednesday, 19 October 2022 07:54 AM , by: R. Balakrishnan

IRCTC Train Ticket

ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஐஆர்சிடிசி (IRCTC) தளம் பயன்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐஆர்சிடிசி மொபைல் ஆப் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐஆர்சிடிசி வழங்குகிறது.

ஐஆர்சிடிசி நிறுவனம் (IRCTC)

ஐஆர்சிடிசி நிறுவனம் கேஷ்இ (CASHe) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் (Travel Now Pay Later) சேவையை வழங்கப்போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சரி அதென்ன ட்ராவல் நவ் பே லேட்டர் சேவை? பொதுவாக ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது அப்போதே கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு வைத்திருப்போர் அதை பயன்படுத்தி கட்டணம் செலுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை தாமதமாக செலுத்திக்கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி - கேஷ்இ நிறுவனங்கள் இணைந்து ‘ட்ராவல் நவ் பே லேட்டர்’ வசதியை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணமே செலுத்தாமல் ‘travel now pay later' வசதியை பயன்படுத்தி டிக்கெட் வாங்கிவிடலாம்.

இஎம்ஐ முறை (EMI Method)

இதற்கு கேஷ்இ கட்டண முறை பயன்படும். அதாவது, உங்களுக்காக கேஷ்இ கட்டணம் செலுத்திவிடும். பிறகு நீங்கள் தாமதமாக கேஷ்இ நிறுவனத்துக்கு டிக்கெட் கட்டணத் தொகையை செலுத்திவிடலாம். இதில் EMI முறையிலும் கட்டணத்தை திருப்பி செலுத்தலாம்.

இதனால் நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஆர்சிடிசி தளத்தில் ஒவ்வொரு நாளும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

PF பயனாளர்களுக்கு குட் நியூஸ்: விரைவில் 81,000 ரூபாய் டெப்பாசிட்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வரிடம் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)