Others

Monday, 04 April 2022 07:50 PM , by: Elavarse Sivakumar

சென்னை விமான நிலையத்தில் சுயஉதவிக் குழு விற்பனை மையம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மகளிர் மற்றும் ஆண்கள் தங்களுக்குள் கூட்டாக இணைந்து செயல்படும் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அவ்சார் என்ற திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினருக்கான விற்பனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுய உதவிக் குழுக்கள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து, வருமானத்திற்கான ஆதாரங்களை சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்ள சுயஉதவிக் குழுக்கள் உதவுகின்றன.

அவர்கள் தங்களுக்குள் கூட்டாக இணைந்து, சுயதொழில் தொடங்கவும் இந்த குழுக்கள் வழிவகுக்கின்றன. குறிப்பாகக் கொரோனா பிரச்சினைக்குப் பிறகு சுய உதவிக் குழுவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்களை வலுப்பத்தி, அவற்றை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் விமான நிலையங்களில் சுய உதவிக் குழுவினருக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.இந்த விற்பனை மையத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 100-200 சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது.

அதில் விற்பனை மையம் அமைக்க விரும்பும் சுயஉதவிக் குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் https://www.aai.aero/en/node/add/shg-user-detail என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)