அகவிலைப்படி உயர்வுதான் அரசு ஊழியர்களைப் பொருத்தவரை, மிக முக்கியமான ஒன்று. இதன் அடிப்படையில்தான் சம்பளம் உயரும் என்பதால், அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த முறை அகவிலைப்படி வழக்கத்தை விட அதிகமாக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகவிலைப்படி
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு செலவுகள் அதிகமாகிறது. எனவே, விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
2 முறை?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். மொத்தமாக 2 முறை உயர்வு கிடைக்கும்.
எவ்வளவு உயர்த்தப்படும்?
அகவிலைப்படி உயர்வு குறித்து ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழக்கமாக 3% உயர்த்தப்படும். அதிகபட்சமாக 6% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.
எகிறும் பணவீக்கம்
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
அகவிலைப்படி கூடுதல் உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி 3% உயர்த்தப்படும். இந்நிலையில், ஜூலையில் 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
நிலுவைத் தொகை
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...