மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 August, 2023 5:01 PM IST
Tamilnadu BVSc and AH counselling Date Notification- View Full Details

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை (BVSc & AH) மற்றும் BTech பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 16 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக சிறப்பு பிரிவு மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு, பிடெக் கலந்தாய்வு நடைப்பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவுக்கான (BVSc & AH)-, பி.டெக். படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான தேதி பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு முறை : நேரடியாக ( அனைத்து படிப்புகளுக்கும்)

கலந்தாய்வு நடைபெறும் இடம்: அண்ணா கலையரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007.

பட்டப்படிப்பு விவரம்- கலந்தாய்வு நடைப்பெறும் தேதி பின்வருமாறு:

16.08.2023: (காலை 9 மணி)

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH- இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்) மற்றும் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)

கலந்தாய்வு: சிறப்புபிரிவு- விளையாட்டு வீரர், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்)

17.08.2023: (காலை 9 மணி)

BVSc & AH- Academic stream and Vocational stream மற்றும் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)

கலந்தாய்வு: 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் (காலையியல் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மற்றும் பிடெக் - உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)

18.08.2023: (காலை 9 மணி)

பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)

முதல் சுற்று கலந்தாய்வு: பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)

படிப்புகள் விவரம் பின்வருமாறு:

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) தொடர்பான பட்டப்படிப்பு தமிழகத்தில் 7 கல்லூரிகளில் உள்ளது. மொத்த கல்வியாண்டு ஐந்தரை ஆண்டுகள் (MSVE விதிமுறை 2016-ன் படி, 4 ½ ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் 1 வருட உள்ளிருப்பு பயிற்சி).

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம்), தலைவாசல் (சேலம்), உடுமலைப்பேட்டை, வீரபாண்டி(தேனி) ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் உள்ள மொத்தம் 660 இடங்களுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைப்பெற உள்ளது.

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பம்:

கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் (BTech- Food Technology) 40 இடங்களும், பால்வள தொழில்நுட்ப பிரிவில் (BTech- Dairy Technology) 20 இடங்களும் உள்ளன. இந்த இரண்டு பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

கோழியின தொழில்நுட்பம்:

ஓசூர் மாவட்டம் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (BTech- poultry Technology) 40 இடங்கள் உள்ளன. இந்தப் பட்டப்படிப்பும் 4 ஆண்டுகள் பயிலும் தன்மை கொண்டது.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in  மற்றும் www.tanuvas.ac.in )என்ற பக்கத்தை காணலாம். கலந்தாய்வு கூட்டத்திற்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே கலந்தாய்வு நடைப்பெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காண்க:

இடி மின்னலுனு மிரட்டும் மழை- 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- 730 நாட்கள் CCL விடுமுறை

English Summary: Tamilnadu BVSc and AH counselling Date Notification- View Full Details
Published on: 10 August 2023, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now