12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு அலகுத் தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
-
வாட்ஸ்ஆப்பில் மாணவியருக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.
-
மாணவ மாணவியர்களுக்குத் தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
-
மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுத வேண்டும்.
-
விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
-
வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது
-
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
என அதில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...