Others

Wednesday, 13 July 2022 09:26 AM , by: Elavarse Sivakumar

மத்திய பிரதேசத்தில், ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவனை, முதலை ஒன்று அப்படியே விழுங்கிய சம்பவம், பெற்றோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஊர்மக்கள்  கூடிவந்து அந்த முதலையைப் பிடித்து, ஆற்றை விட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பொதுவாக விலங்குகள் மனிதர்களைத் தாக்கும் எண்ணத்துடன் இருப்பதில்லை. அவற்றுக்கு நம்மால் தீங்கு இழைக்கப்படும்போதுதான், துன்புறுத்தலில் ஈடுபடுகின்றன. இதுதவிர தங்களுக்கு இரைதேடும் முயற்சியிலும் சில அசம்பாவிதங்கள் நேரக்கூடும். அப்படியொரு சம்பவம்தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது.

குளிக்கச் சென்றான்

மத்திய பிரதேசத்தின் ஷியோபோர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், அங்கு ஓடும் சம்பல் ஆற்றில், குளிக்க சென்றான்.
அப்போது, ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்று சிறுவனை கவ்வி, ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறலைக் கேட்ட உள்ளூர்காரர்கள் அதிர்ச்சி அடைந்து, சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

இரையாக்கிக் கொண்ட முதலை

பின், கிராமத்தினர் வலை, கயிறுகள் உதவியுடன் முதலையை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் முதலையை, கிராம மக்கள் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர்.

ஊர்மக்களுக்கு ஏமாற்றம்

ஆனால், முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பார் என நம்பிய கிராமத்தினர், முதலை சிறுவனை கக்கும் வரை விடமாட்டோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர், அவர்களிடம் இருந்து முதலையைமீட்டு சென்றனர். சிறுவனின் கதி தெரியவில்லை.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)