இரயில் பயணத்தின் போது , இரயில்வே சிவப்பு நிற சிக்னலின் போதும், இரயில் நிலையத்திலும் மட்டுமே இரயில் நிறுத்தப்படும். ஆனால், பூரி வாங்க இரயிலை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இராஜஸ்தானில், நடுவழியில் உள்ள 'கேட்' அருகே ரயிலை நிறுத்தி பூரி, மசால் வாங்கிய இன்ஜின் டிரைவர் உட்பட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இரயில் நிறுத்தம் (Train Stopped)
இராஜஸ்தானின் ஆல்வாரில் ஒரு இரயில் இன்ஜின் டிரைவரின் செயல், சமூக வலைதளங்களில் 'வீடியோ'வாக வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆல்வாரில் மூடப்பட்டுள்ள ரயில்வே 'கேட்' அருகே இன்ஜின் டிரைவர் பயணியர் ரயிலை நிறுத்துகிறார். கேட் கீப்பர் ஓடிவந்து, டிரைவரிடம் ஒரு 'பார்சலை' தருகிறார். பின் ரயில் புறப்படுகிறது.
விசாரணையில், அங்குள்ள கடையில் சுவையான பூரி, மசால் கிடைப்பதும், அதற்காக தினசரி காலை 8:00 மணிக்கு ரயிலை நிறுத்தி, இன்ஜின் டிரைவர் அதை வாங்குவதும் தெரிய வந்தது. இந்த செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து, இன்ஜின் டிரைவர்கள், கேட் கீப்பர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். இனி இதுபோல் சம்பவங்கள் நிகழாது என்றும் இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிமுகமானது கடல்வழி டாக்ஸி திட்டம்!