Others

Tuesday, 05 October 2021 08:07 AM , by: R. Balakrishnan

The festival

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் பெண் தெய்வத்தை கடந்த 3 தலைமுறைகளாக ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா நடந்தது. முதல்நாடு கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து புரட்டாசி 3வது வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஒருவாரமாக இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.

சிறப்புபூஜை

கொரோனா தொற்றில் (Corona Virus) இருந்து மக்கள் மீண்டு வரவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் நடமாட்டம் இல்லாத கண்மாய் பகுதியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து நள்ளிரவில் 50 கிடா பலியிட்டு சிறப்புபூஜை செய்தனர்.

ஆண்கள் மட்டும்

கடந்தாண்டு தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை (Paddy) ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்த அரிசியில் பச்சரிசி சாதம் தயார் செய்து படையல் படைத்தனர். விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 3000க்கும் அதிகமான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு பனைஓலையால் செய்த மட்டையில் அசைவ விருந்து, பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டது. சாதம் வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்தவை அங்கேயே புதைக்கப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

நெகிழ்ச்சி சம்பவம்: உயிரிழந்த தாய்க்கு சிலை அமைத்த மகன்!

எச்சரிக்கை: SMS மூலம் பறிபோகும் அபாயம்: உஷாரா இருங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)