சுற்றுச் சூழல் மாசுபாடு, பெட்ரோல் - டீசல் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல, பல்வேறு வசதிகளுடன் புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
மிகவும் எதிர்பார்த்த பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், சென்னையில் அறிமுகமாகி உள்ளது. இதன் இணையதளத்தில் ரூ. 2000 செலுத்தி புக்கிங் செய்யலாம். அர்பேன், பிரிமியம் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.
சிறப்பம்சம்
- பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - 3 கிலோ வாட் லித்தியம் அயான் பேட்டரி, 3.8 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.
- பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணிநேரம் தேவைப்படும்.
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ., பயணிக்கலாம். மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லும்.
- எல்இடி ஹெட்லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ரிவர்ஸ் கியர், டிஸ்க் பிரேக் உடன் இன்டலிஜென்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ., துாரத்திற்கு வாரன்டி, ரிவர்ஸ் அசிஸ்ட், ஸ்டீல் பிரேம் உடன் மெட்டல் பாடி சிறப்பம்சம் உள்ளது.
விலை (ஆன் ரோடு)
- அர்பேன் வேரியன்ட் - ரூ.1.51 லட்சம்
- பிரிமியம் வேரியன்ட் - ரூ.1.53 லட்சம்
மேலும் படிக்க