Others

Friday, 18 February 2022 10:54 AM , by: Elavarse Sivakumar

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, என்பவர், தனது காதலுக்கு தடையாக இருந்த மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதலின் உச்சக்கட்டமாகவே, கணவன் இங்கு கொலைகாரக் கணவனாக மாறியிருக்கிறார். 

இந்தியாவைப் பொறுத்தவரை, 2-வது திருமணத்தை சட்டம் எந்த வகையிலும் அங்ககீகரிப்பதில்லை. ஆனால், தாம்பத்தியத்திற்கு அடிமையாகும் சில ஆண்கள் தவறாது 2-வது திருமணத்திற்கு தயாராகின்றனர். இதற்கு முதல் மனைவித் தடையாக இருக்கும்பட்சத்தில், அவளைக் கொலை செய்யவும் துணிந்துவிடுகின்றன. அதேபோல், தான் செய்தக் கொலையை மறைக்கவும் எந்த எல்லைக்கும் சென்றுவிடுகின்றனர்.அப்படியொரு கோரச் சம்பவம் தற்போது பிரேசிலில் நடந்துள்ளது.

மனைவியைக் கொன்ற கொடுமை

பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, என்பவர் ஏற்கனவேத் திருமணமானவர். ஆனால், வேறு ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். அவளை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானார். ஆனால், தாம் 2-வது திருமணம் செய்து கொள்ளத் தடையாக இருந்த மனைவியை கொடூரமாக கொன்று, கூறுபோட்டுச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலைகாரக் கணவன்

குற்றவாளி மௌரோ சம்பீட்ரி அவரது மனைவி Claudete உடன் நீண்ட காலம் வழ்ந்த போதிலும், இடையில் ஏற்பட்ட கள்ளக் காதலுக்கு அவர் தடையாக இருந்ததால் அவரைக் கொன்றார். இருப்பினும், மனைவி காணாமல் போனதாக நாடகமாடிய நிலையிடல்,  போலீஸார் வீட்டில் நடத்திய சோதனை மற்றும் விசாரனையில், வீட்டின் அருகே அவரது உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு மேலும் விசாரனை செய்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

இந்த கொடூர கொலைச் செயலானது ஜனவரி 2017 ஆண்டு மௌரோவால் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சிறையில் இருந்து தப்பித்து சென்று, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் போலீஸில் படிப்பட்டார்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)