ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி, இந்திய தின்பண்டமான பக்கோடாவால் ஈர்க்கப்பட்டதால், தங்கள் குழந்தைக்கு, 'பக்கோடா' என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
பக்கோடா (Pakoda)
நம் நாட்டில், நொறுக்குத் தீனியில் முக்கிய இடம் வகிப்பது பக்கோடா. இதை, பிரிட்டனில் பக்கோரா என அழைக்கின்றனர். அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் விற்கப்படும் இந்த பக்கோடாவால் ஈர்க்கப்பட்ட பிரிட்டன் தம்பதி, அடிக்கடி அதை வாங்கி சுவைத்துள்ளனர்.
சமீபத்தில், தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு, 'பக்கோடா' எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். பக்கோடா தங்களுக்குப் பிடித்தமான தின்பண்டம் என்பதால், தங்கள் குழந்தைக்கும் அப்பெயரையே சூட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த அந்த உணவக உரிமையாளர், பக்கோடா என பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்கும், தம்பதிக்கும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
மேலும் படிக்க
தேனில் ஊறவைத்த வெங்காயத்தை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
பிறந்த உடனே குழந்தை இறந்தாலும், மகளிருக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு!