தமிழ்நாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மின்வாரிய ஓய்வூதியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் நினைவூட்டி வருகின்றனர். ஏற்கனவே பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா என அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
போராட்டம்
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த பாலம்மாள் காலனியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தலைவர் தேவராஜ் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் தங்களுடைய சட்டைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
இதில் முக்கிய கோரிக்கைகளாக மின்துறை பொது துறையாக நீடித்திடவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று சதவீத பஞ்சப் படியை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியினை நிலுவையுடன் பெற்றிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
விருதுநகரிலும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பாக மாவட்ட தலைவர் சந்தியாகப்பன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பிற மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!