Others

Thursday, 20 January 2022 08:40 PM , by: Elavarse Sivakumar

சினிமான பாணியில் குடும்பத் தகராறில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி, கணவன் தலையுடன் காவல் நிலையம் வந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசல் இல்லாத வீடும், சண்டை இல்லாத குடும்பமும் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனாலும், அத்துமீறலும், எல்லை மீறலும் நடக்கும்போது, அசம்பாவிதங்களும் நிகழத்தான் செய்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் இது. குடும்பச்சண்டையில் கொதித்துக்போன மனைவி, கணவனைக் கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

சண்டை வாடிக்கை

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 53 வயதான ரவிச்சந்திரனின் மனைவி வசுந்தரா. குடும்பத் தகராறு காரணமாக இவர்கள் இருவருக்குள் அடிக்கடி சண்டை நடப்பது சகஜம்.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பில் முடிந்துள்ளது.

கழுத்தறுத்துக் கொலை

கணவன் கொடுமை தாங்காமல் விரக்தியடைந்த வசுந்தரா, ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து, கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவிச்சந்திரன், இறந்ததை அடுத்து வசுந்தரா வீட்டை விட்டு தலையுடன் வெளியே சென்றுள்ளார்.

போலீஸாருக்குத் தகவல்

இரத்தம் சொட்டச் சொட்ட வசுந்தரா சென்றதை கண்டு அச்சம் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வசுந்தரா தன் கணவனை கழுத்தறுத்து கொன்றதை உறுதிசெய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

பின்னர் வசுந்தராவைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் வசுந்தரா மனநலம் பாதித்தவர் என்பதும், அவர்கள் இருவருக்கும் 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...

முகக் கவசத்தின் அவசியம்: ஆட்டோ டிரைவர் விழிப்புணர்வு!

365 வகை உணவுகள்: வருங்கால மாப்பிள்ளைக்கு விருந்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)