இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 April, 2022 9:51 AM IST

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகை இப்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

​அகவிலைப்படி நிறுத்தம்

2020ஆம் ஆண்டில் கொரோனா நெருக்கடி தொடங்கியபோது செலவுகளை சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அகவிலைப்படி (According to DA)

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

​18 மாத நிலுவைத் தொகை (18 months outstanding)

2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு எப்போது வழங்கும் என மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு பெருந்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏமாற்றம் (Disappointment)

இந்நிலையில், ஓய்வூதிய விதிமுறைகள் திருத்தத்திற்கான நிலைக் குழுவின் 32ஆவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் மத்திய பென்சனர் நலத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர், 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

​எவ்வளவு சேமிப்பு?

18 மாதங்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்காததால் மத்திய அரசு தோராயமாக 34,402 கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகவிலைப்படி

முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34% ஆக உயர்த்துவதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய கேபினட் ஒப்புதல் அளித்தது. இதற்கு முன் அகவிலைப்படி 31% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!

வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?

English Summary: There is currently no balance on the price - the government has handed over!
Published on: 26 April 2022, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now