Others

Thursday, 11 August 2022 09:23 AM , by: Elavarse Sivakumar

2-வது திருமணம் செய்துகொண்டவர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் குறித்து இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் போலா ராம். இவர் 1964ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். 1983ஆம் ஆண்டில் பணிஓய்வுபெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் போலா ராம் இறந்துவிட்டார். அவர் இறப்புக்கு பின் முதல் மனைவிக்கு குடும்ப பென்சன் கிடைத்து வந்துள்ளது.

2-வது மனைவி

முதல் மனைவி இறந்தபிறகு, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் போலா ராமின் இரண்டாவது மனைவி மனுத்தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் மறுப்பு

இந்த மனு இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்து திருமணச் சட்டத்தின்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணம் செல்லாது. எனவே, இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

உரிமை உண்டு

இரண்டாவது திருமணம் செல்லாவிட்டாலும் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை உண்டு. முதல் மனைவி இறந்தபிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணம் செல்லும். இதன்படி இரண்டாம் மனைவிக்கு பென்சன் உள்ளிட்ட பலன்களை பெறுவதற்கான உரிமை உண்டு. முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் இருந்தால், பிள்ளைகளுக்கும், இரண்டாம் மனைவிக்கும் குடும்ப ஓய்வூதியம் சமமாக பிரித்து வழங்கப்பட வேண்டும்.

தள்ளுபடி

போலா ராமுக்கு முதல் திருமணம் நடந்ததே தெரியாமல் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தனக்கு பிள்ளைகள் இருப்பதாகவும், குடும்ப ஓய்வூதியத்தை வழங்கும்படி மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரினார்.
ஆனால், மனுதாரருக்கு சட்டப்படி குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என கூறி அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும் படிக்க...

சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞர்!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)