இந்தியாவில் வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் பைக்குகளின் பைன்-அப் இது.
ஹோண்டா:
125சிசி, 160சிசி மற்றும் 350சிசி என மூன்று செக்மன்ட்களில் மூன்று புதிய பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. ஆக்டிவாவின் இன்ஜினுடன் புதிய 125சிசி ஸ்கூட்டர், யுனிகார்ன் மற்றும் எக்ஸ்பிளேடின் இன்ஜினைக் கொண்ட புதிய 160சிசி பைக் மற்றும் CB350RS-ன் ப்ளாட்ஃபார்மில் தயாராகவிருக்கும் புதிய 350சிசி பைக் ஒன்றையும் வெளியிடவிருக்கிறது ஹோண்டா.
ராயல் என்ஃபீல்டு:
450, ஷாட்கன் 650, J சீரிஸ் புல்லட் 350 மற்றும் 650சிசி ஸ்கிராம்ப்லர் என பல புதிய பைக்குகளை தன்னுடைய லைன்-அப்பில் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மேற்கூறிய பைக்குகளை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு.
ட்ரையம்ப்:
இந்தியாவில் புதிய பைக்குகளை தயாரித்து வெளியிட பஜாஜ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ட்ரையம்ப். இந்தக் கூட்டணியின் முதல் பைக்கை வரும் ஜூன் 27-ம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்காகவே இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் R மற்றும் RS பைக்குகளும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
டிவிஎஸ்:
பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் பைக் தயாரிப்பிற்காக இந்தியாவில் கைகோர்த்திருக்கிறது டிவிஎஸ். இந்தக் கூட்டணியில் வெளியான மாடல் தான் அப்பாச்சி RR 310. இந்த மாடலை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரீட் நேக்கட் வெர்ஷனான RTR 310 பைக்கை விரைவில் டிவிஎஸ் வெளியிடவிருக்கிறது. அதோடு, புதிய ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது டிவிஎஸ்.
மேலும் படிக்க:
கர்ப்பிணிகளுக்கு நூலகம்! அசத்தல் திட்டத்திற்கு குவியும் பாராட்டு!