இந்தியாவில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் கோவிட்க்குப் பிறகு 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை வழங்க திட்டமிட்டுள்ளன, இந்த செய்தி இளைநர்களுக்கான நற்செய்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கொரோனா பரவலுக்கு பிறகு, நாடு முழுவதும் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, கோவிட் நோயின் பாதிப்புகள் தற்போது குறைந்து வருகிறது, பெரும்பாலான நிறுவனங்கள், தற்போழுது தங்கள் பணியாளர்களை அலுவலகத்தில் வரவழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு வர, ஏற்கனவே அறிவிப்புகளை வழங்கிவிட்டன. அதேபோல, பல நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செயல்முறை, தற்போது துரிதப்படுத்தியுள்ளனர்.
MNC இல் பெரிய வேலை வாய்ப்புகள்:
இந்தியாவை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் (MNCs) யூனிட்கள், தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் இருக்கும் மற்றும் வரவிருக்கும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) இந்த நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 180,000-200,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன.
அமக்ஸ், பாங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ, சிட்டி, பார்க்லேஸ், மோர்கன் ஸ்டான்லி, எச்எஸ்பிசி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், ஜிஎஸ்கே, கோல்ட்மேன் சாக்ஸ், அமேசான், டார்கெட், வால்மார்ட், ஷெல், அபோட், ஃபைசர், ஜே&ஜே, நோவார்டிஸ் ஆகியவை பணியமர்த்தல் துறையில் உள்ள சிறந்த நிறுவனங்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் தற்போது வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI), IT மென்பொருள், வாகனம், மருந்து, சில்லறை விற்பனை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளில் சுமார் 1,500 GCCகள் இருக்கின்றன. Xpheno வழங்கிய தரவுகளின்படி, 2021-22ல் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,70,000 வேலை வாய்ப்புகளை, இந்தக் குழுமம் வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் மொத்த பணியமர்த்தல் சுமார் 3,50,000 ஆக இருந்தது, மேலும் 2025 ஆம் ஆண்டளவில், மேலும் 500 புதிய GCCக்கள் நாட்டில், தங்கள் கேப்டிவ் தொழில்நுட்ப மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கின்றன, ஆகவே அதிக வேலைவாய்ப்புகளின் அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2015ஆம் நிதியாண்டில் இருந்து மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருப்பதும் குறிப்பிடதக்கது. தற்போது, 1.5 மில்லியனாக இருந்த சந்தை அளவு $60 பில்லியனாக அதிகரிக்கும் என மதிக்கப்படுகிறது.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜமப்பா!
கோவிட் -19 தொற்றுக்கு பிறகு, ஜி.சி.சி நாட்டில் வளரத் தொடங்கியது, மேலும் இது தொலைதூரத்தில் வேலை செய்யும் யோசனைக்கான நிறுவனங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்தது. இந்தியாவில் GCC இல், அதிக ஆட்சேர்ப்பு செய்பவர்கள் BFSI நிறுவனங்கள் ஆகும்.
BFSI GCC கிளஸ்டர் நிகரமானது 2022 நிதியாண்டில் 60,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு சேர்த்தது, இது நிதியாண்டில் மொத்த நிகர சேர்த்தலில் மூன்றில் ஒரு பங்காகும்.
இதற்கிடையில், இந்தியாவின் திறமையைப் பாராட்டி, Deutsche India, CEO, திலிப்குமார் கண்டேல்வால், "இந்தியா மிகவும் ஆழமான திறமைகளைக் கொண்டுள்ளது, பொறியியல் மற்றும் நிதி பின்னணியில் ஏராளமான வளங்களைக் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!
Deutsche India, இந்த ஆண்டு 3,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது, முதன்மையாக அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் அனைத்தும், இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளன, இது நாட்டிற்கு நன்மை பயக்கும் திறன் கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
TNPSC: குரூப்- 2 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் அவசர அறிவிப்பு!