Others

Saturday, 22 October 2022 10:42 AM , by: Elavarse Sivakumar

வேலைக்கு போனால் பணம் சம்பாதிக்கலாம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், பணத்தை வைத்தும், அதாவது இந்த ஒரே ஒரு ரூபாய் நோட்டை வைத்திருந்தால் நீங்களும் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

பணமழை

புதிய நாணயங்களையும், ரூபாய் நோட்டுக்களையும் சேமிக்கும் பழக்கம், நம்மில் பலருக்கு இருக்கும். அத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு தற்போது மார்க்கெட்டில் அதிகத் தேவை உருவாகியிருக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், இவர்கள் காட்டில் தற்போது பணமழைதான்.

ரூ.2 லட்சம்

ந்த வகையில், இந்த 5 ரூபாய் நோட்டில் உள்ள குறிப்புகளை கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். இந்த நோட்டைக்கொண்டு, ரூ.35 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு அம்சம்

இந்த 5 ரூபாய் நோட்டு '786' என்ற தொடரில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நோட்டின் சிறப்பு. மேலும், இந்த நோட்டில் டிராக்டரின் படம் இருக்க வேண்டும். இப்படி ஒரு நோட்டு இருந்தால், ரூ.2 லட்சம் வரை பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபந்தனைகள்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள மிக அரிய ரூபாய் நோட்டுகளை கொண்டு நிறைய பணம் பெறலாம். பல இணையதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் படி இருந்தால் நல்ல தொகையைப் பெறலாம்.

விற்பது எப்படி?

5 ரூபாய் டிராக்டர் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் இருந்தால் அதற்கு பதிலாக ரூ.2 லட்சம் வரை பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல தனியார் நிறுவனங்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனங்களில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக பல மடங்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!

மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)