Others

Monday, 07 November 2022 10:58 AM , by: R. Balakrishnan

Free service for Pensioners

ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே பென்சன் தொடர்ந்து வரும்.

வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)

ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக தபால் துறையும், பல்வேறு வங்கிகளும் நேரடியாக ஓய்வூதியதாரர் வீட்டில் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த சேவையை பயன்படுத்தி எளிதாக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். உதாரணமாக பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான சேவையை வழங்கி வருகிறது. தற்போது குறுகிய கால சலுகையாக இச்சேவைக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி.

இதுவரை, வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக 60 ரூபாயும், ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலித்து வந்தது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை கட்டணமே இல்லாமல் இலவசமாக வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் மாதத்துக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ஓய்வூதியதாரர்கள் உடனடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் இலவச சேவையை பயன்படுத்தி கட்டணமே இல்லாமல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க

பென்சன் தொகை உயர்வு: யாருக்கெல்லாம் கிடைக்கும் - முழுவிவரம் இதோ!

2014 பென்சன் திட்டம் செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)