மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட வானகத்தில் வருகிற மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாள் இயற்கை வழி வேளாண்மை குறித்த பயிற்சி நடைப்பெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு தொடங்கியுள்ளது.
” வேளாண்மை என்பது வியாபரமல்ல.. வாழ்வியல்..” என்றார் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வினை வழங்கும் வகையில் தன் வாழ்நாள் முழுவதும் களப்பணி ஆற்றியவர் நம்மாழ்வார்.
” இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி உழவர்கள் நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற உழவர்களை ஒருபடி மேல உயர்த்தி விடனும்” என்கிற நோக்கத்தோடு செயல்பட்டவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வார் தொடங்கிய விவசாயிகளுக்கான பயிற்சி வழங்கும் திட்டம், அவரின் மறைவுக்குப் பின்னும் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற மே மாதம் (5.5.2023) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி (7.5.2023) ஞாயிறு மாலை 5.00 மணி வரை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பயிற்சிக்கான நன்கொடையாக ரூ.2300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் போது தங்குமிடம், உணவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் கற்றுத்தருபவை:
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான நிகழ்விடமானது கரூர் மாவட்டம், கடவூர் சுருமான்பட்டியில் உள்ள “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation:
A/C No: 137101000008277
IFSC Code: IOBA0001371
Bank Name: Indian Overseas Bank,
Branch Name: Kadavoor Branch, Karur (Dt), TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யலாம். மேலும் நிகழ்வு தொடர்பான விவரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள கீழ்க்காணும் தொடர்பு எண் வாயிலாக அறியலாம். ( 8668098492 , 8668098495 , 9445879292 )
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,வெளியில் தங்கவோ அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ள நிலையில் களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்குகளை (torch) பங்கேற்பாளர்கள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மேலும் காண்க:
இறால் விவசாயிகளை கதிகலங்க வைத்த வெள்ளைப்புள்ளி வைரஸ் தாக்குதல்!