Others

Friday, 04 October 2019 11:42 AM

வட கிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் 20 முதல் துவங்க உள்ளதாக வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான தென் மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கினாலும், வழக்கத்திற்கு அதிகமாகவே மழை பொழிந்துள்ளது. இதில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழையும் (South West Monsson), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை (North East Monsoon) பொழியும் காலமாகும். இதனிடையே இன்னும் ஓரிரு நாட்களில் தென் மேற்கு பருவ மழை முடிவடைந்து, அக்டோபர் 20 முதல் வட கிழக்கு பருவ மழை துவங்கும் என வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

வீசி வரும் தென் மேற்கு பருவ காற்று ஓரிரு நாட்களில் வட கிழக்காக மாறிவிடும். கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களே தென் மேற்கு பருவ மழையால் அதிகம் பயன் பெற்ற நிலையில்,  டெல்டா (Delta) மற்றும் வட மாவட்டங்கள் (Northen Districts) துவங்கவிருக்கும் வட கிழக்கு பருவ மழையால் நல்ல பயன் பெருவார்கள், எனவே விவசாயிகள் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் துவங்க உள்ள வட கிழக்கு பருவ மழையை  ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

தென் மேற்கு பருவ மழையை நடப்பாண்டில் 50 சதவீதம் அதிகமாகவே பெற்றுள்ளோம். மேலும் தென் மேற்கு பருவ மழை கோவையில் நான்கு மாதங்களில் 18 மழை நாட்களில்  308 மி.மீ  மழை பொழிவையும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஒரே நாளில் 130 மி.மீ மழையையும் பெற்றுள்ளோம்.

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் இந்த ஆண்டும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)