
ஒரு கிலோ மீன் 800 மற்றும் 1,000 ரூபாய் என்று விற்கும்போது, கேரளாவில் ஒருவர், 10 ரூபாய்க்கு மீன் விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. ஆம், ஒரு மனிதர் 10 ரூபாய்க்கு மீன் விற்று வியாபாரம் செய்து வருகிறார். இது கேரள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, ஆச்சரியத்தையும் அதிக அளவில் அள்ளிக் கொடுத்திருக்கிறது.
மீன் விற்பனை (Fish Sales)
கோழிக்கோடு, ஒளவண்ண கிராமத்தை சேர்ந்த ராமேட்டன் தான், அந்த அற்புத மனிதர்.
தினமும் கடற்கரைக்கு சென்று மீன்களை வாங்கி, சைக்கிளில் வைத்து ஊர் முழுவதும் சென்று வியாபாரம் செய்கிறார்.
'இப்படி குறைந்த விலைக்கு விற்கிறீர்களே...' என்று கேட்டால், 'அதிக பணம் எதற்கு... மனைவி, மகன் இருவரும் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர்; அதுவே எங்களுக்கு போதுமானது...' என்று சிரித்தபடி கூறி, அடுத்த வாடிக்கையாளரை நோக்கி தன் சைக்கிளை உருட்டுகிறார், ராமேட்டன்.
மற்றவர்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி தன் பாக்கெட்டுக்கு வரவழைப்பது என்று யோசிப்பவர்கள் மத்தியில், இவர் உயர்ந்து நிற்கிறார். நிச்சயமாக இது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் போற்றத்தக்க மனிதர் இவர்.
மேலும் படிக்க