
நாட்டில் ஸ்கூட்டர்கள்(Scooters) அதிகம் விற்பனையாகும் நிறுவனங்களில், ஹோண்டா, டிவிஎஸ், ஹீரோ மற்றும் சுசுகி போன்ற நிறுவனங்களின் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. அதிலும் ஆக்டிவா(Activa), ஜூபிடர்(Jupiter), மேஸ்ட்ரோ(Mestero), ஆக்சஸ்(Access) போன்ற ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களாக இருக்கின்றன.
நீங்களும் ஒரு ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற மற்றும் சரியாக பொருந்தக்கூடிய இந்த இரண்டு பெரிய நிறுவனங்களின் இரண்டு ஸ்கூட்டர்களைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஒப்பீட்டில், நாங்கள் டிவிஎஸ்ஸின் ஜூபிடர் மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோவைத் தேர்ந்தெடுத்தோம். இந்த இரண்டின் விலை, மைலேஜ், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்பு தொடர்பான ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய தகவல்களையும் இங்கே நீங்கள் அறியலாம். இதன் மூலியமாக உங்களுக்கான சரியான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
TVS Jupiter
டிவிஎஸ் ஜூபிடர் இந்தியா தனது நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் மற்றும் இந்தியாவின் இரண்டாவது சிறந்த விற்பனையான ஸ்கூட்டர் ஆகும். நிறுவனம் இந்த ஸ்கூட்டரை ஐந்து வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூபிட்டரின் முதல் மாறுபாடு வேரியன்ட் ஸ்டீல் மெட்டல் பிளேட், இரண்டாவது வேரியன்ட் STD மற்றும் மூன்றாவது வேரியன்ட் ZX ஆகும். நிறுவனம் ஜூபிடரில் ஒரு ஒற்றை சிலிண்டர் 109.7 சிசி எஞ்சின் கொடுத்துள்ளது. இந்த எஞ்சின் 7.47 பிஎஸ் பவரையும், 8.4 என்எம் டார்க்கையும் உருவாக்க முடியும்.
இந்த ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் ட்ரான்ஸ்மிசன் ஆட்டோமேட்டிக் ஆகும்.
ஜூபிட்டரின் மைலேஜ் குறித்து, ஹீரோ அது 62.4 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறுகிறது. இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 65,673 ஆகும், இது டாப் மாடலில் ரூ. 75,773 வரை செல்கிறது.
Hero Maestro Edge 110
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஒரு கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர். நிறுவனம் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதல் வேரியன்ட் டிரம் பிரேக் அலாய் வீல் எஃப்ஐ, இரண்டாவது வேரியன்ட் அலாய் வீல் எஃப்ஐ மற்றும் மூன்றாவது வேரியன்ட் 100 மில்லியன் எடிஷன் ஆகும்.
இந்த ஸ்கூட்டருக்கு ஒரு சிலிண்டர் 110.9 சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8.15 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. ஸ்கூட்டரின் ட்ரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் ஆகும்.
ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. ஸ்கூட்டரின் டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோவின் ஆரம்ப விலை ரூ. 64,250 ஆகும், இதனுடைய டாப் மாடல் ரூ .67,250 வரை ஆகும்.
மேலும் படிக்க:
ரூ .499க்கு Ola S1 Electric Scooter ஐ வாங்கலாம்! அம்சங்கள் மற்றும் விலை!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்! ரூ. 20,000 தள்ளுபடி!