நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 March, 2023 12:34 PM IST
update Aadhaar card details once every 10 years says union ministry

ஆதார் அட்டையினை பெற்று 10 ஆண்டுகளாகி இருந்தால், அவற்றில் உள்ள தகவல்களை புதுப்பிக்குமாறு ஒன்றிய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் அவற்றை புதுப்பிக்கும் வழிமுறைகளை இப்பகுதியில் காணலாம்.

UIDAI இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையானது ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான செயல்முறைகளுக்காகவும் பயன்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அதே சமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (POI-Proof of Identity) மற்றும் முகவரி சான்று POA- (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள 01) வாக்காளர் அடையாள அட்டை 2) குடும்ப அட்டை, 3) ஓட்டுநர் உரிமம், 4) பான் கார்டு, 5) வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தினை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியைப் புதுப்பிக்க கீழ்க்காணும் இந்த 8 படிகளைப் (steps) பின்பற்றவும்:

படி 1: uidai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். அதில் விருப்பமான மொழியினை தேர்வு செய்யவும்.

படி 2:  அதன்பின் 'எனது ஆதார்' பக்கத்தின் கீழ், 'புள்ளிவிவரங்கள் தரவைப் புதுப்பித்து நிலையைச் சரிபார்க்கவும்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: நீங்கள் வேறு இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்-

https://myaadhaar.uidai.gov.in/. நீங்கள் 'உள்நுழை' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். 'ஓடிபி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்

படி 5: OTP உள்ளீட்டு உள்நுழைந்ததும், 'ஆன்லைனில் ஆதார் புதுப்பி' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 6:  வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்து, 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 7: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தரவினை ( பெயர், பிறந்த தேதி, விலாசம்/முகவரி) தேர்ந்தெடுக்கவும்.  உதாரணத்திற்கு ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்பட வேண்டிய புதிய முகவரிக்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். 'ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 8: விவரங்கள் சரியாக இருந்தால் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். ஜூன் 14 ஆம் தேதி வரை இணையத்தில் இச்சேவை இலவசம். அதன்பின் நீங்கள் கட்டண போர்ட்டலுக்கு திருப்பி விடப்படுவீர்கள். முகவரியைப் புதுப்பிக்க ரூ.50 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

36 செயற்கைக் கோள்களுடன் LVM-III ராக்கெட் - இஸ்ரோ நிகழ்த்திய மற்றொரு சாதனை!

English Summary: update Aadhaar card details once every 10 years says union ministry
Published on: 26 March 2023, 12:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now