ஒடிசாவில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கிராம மக்கள் எழுத்து தேர்வு (Written Exam) வைத்தனர். ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.இங்கு, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில், மலுபாடா கிராமம் உள்ளது. இதன் கீழ் உள்ள குத்ரா பஞ்சாயத்துக்கு வரும் 18ல் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எழுத்து தேர்வு (Written Exam)
இவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்களா என்பதை சோதிக்க, அவர்களுக்கு வாய்மொழி மற்றும் எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது குறித்து தெரிவித்ததும், ஒன்பது பேரில் எட்டு பேர் தேர்வு எழுத சம்மதித்தனர். அவர்களுக்கு பள்ளியில் வைத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு ஏழு கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் அளிக்க 30 நிமிடம் கொடுக்கப்பட்டது.
'முதல் 15 நிமிடத்தில் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். அடுத்த 15 நிமிடங்களில் அதே கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்கள் தேர்வு எழுதினர். இரவு 8:00 மணி வரை தேர்வு நடந்தது.
இதன் முடிவு, பிப்ரவரி 17ல் வெளியாகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: நீங்கள் வெற்றி பெற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்ன திட்டங்களை செய்வீர்கள்; அரசியலில் நுழைவதற்கு நீங்கள் செய்த சமூக சேவைகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகள் வேட்பாளர்களிடம் கேட்கப்பட்டன.
மேலும் படிக்க