மத்திய அரசு ஊழியர்களின் சம்பள கணக்கீட்டுக்கான பிட்மெண்ட் காரணியை விரைவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்கவுள்ளது. மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அகவிலைப்படி
ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை (ஃபிட்மெண்ட் காரணி) அதிகரிக்கும் கட்டாயத்தில் மத்திய அரசுக்கு உள்ளது. அண்மையில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஃபிட்மெண்ட் காரணியும் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் பலன் கிடைக்கும்.
இதன்படி,குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000லிஇருந்து ரூ.26,000 ஆக உயரும். ஃபிட்மெண்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
உயருகிறது சம்பளம்
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 வரை உயரும். அதாவது குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும். அப்போது, ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலோவென்ஸ் தவிர்த்து, 2.57 ஃபிட்மெண்ட் காரணியின்படி ரூ.46,260 கிடைக்கும்.
அதாவது 18,000 X 2.57 = 46,260
ஃபிட்மெண்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 ஆக உயரும்.
அதாவது, 26000X3.68 = 95,680
எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்க உள்ளது.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!