Others

Thursday, 16 December 2021 10:50 PM , by: Elavarse Sivakumar

Credit : The Economic Times

தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.2 லட்சம் வரை (Up to Rs 2 lakh)

சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் சிறு தொழில் தொடங்க கடன் பெற முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான தொடர்பு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

சென்னையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (TNULM) கீழ் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுக்காக நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை (Priority)

மேலும், தெருவோர வியாபாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ரூ.10 லட்சம் வரை (Up to Rs 10 lakh)

மேலும், சுயஉதவி குழுக்கள் (SHGs), SHG உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெறலாம். சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் கடன்களைப் பெறலாம்.

வட்டிக்கு மானியம் (Subsidy for interest)

சுய உதவிக்குழுக்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற தகுதியுடையவர்கள். கூடுதலாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்களைத்
தொடங்குவதற்கு பெறப்படும் கடனுக்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்கும்.
கடன் பெற விரும்பும் பொதுமக்கள் இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 9444094247, 9444094248 அல்லது 9444094249 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு (Contact)

மேலும் திட்ட மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த சென்னை மாநகராட்சி வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு நற்செய்தி! விவசாய பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்றம்!

திடீரென்று இஞ்சி மலிவானது! குவிண்டால் ரூ.700 ஆக விலை சரிந்தது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)