
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் குறித்த 2 பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே இதனைப் பயன்படுத்திக்கொண்டு தொழில் அதிபராகும் வாய்ப்பைக் கைநழுவ விடாதீர்கள்.
2 நாள் பயிற்சி
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
24.05.2022 மற்றும் 25.05.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
சிறப்பு அம்சம்
இதில் கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஹெல்த் மிக்ஸ்
தோசை மிக்ஸ்
அடைமிக்ஸ்
டேக்ளா மிக்ஸ்
கீர் மிக்ஸ்
குளோப் ஜாமூன் மிக்ஸ்
ஐஸ் கீரிம் மிக்ஸ்
தக்காளி சாதப் மிக்ஸ்
பிசிபேலா பாத் மிக்ஸ்
சூப் மிக்கப்
ஹல்வா மிக்ஸ்
கட்டணம்
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- செலுத்த வேண்டும். அதாவது (ரூ.1.500/-+18% GST) பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி
பயிற்சி நடைபெறும் இடம் - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்- 641003.
பேருந்து நிறுத்தம்: வாயில் எண் 7. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக கோயம்புத்தூர்- 641003
கூடுதல் விபரங்களுக்கு,பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் 0422-6611268 என்றத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...