இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 11 March, 2022 10:23 AM IST

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 444 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்வித் தகுதி பட்டப்படிப்பு மட்டுமே. எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கெனத் தனி மதிப்பு உண்டு. ஏனெனில், தமிழர்களின் தைரியமும், துணிச்சலும் சாலச் சிறந்தது.

அந்த வகையில், ஒரு இடத்தில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணியும், தைரியமும் நம்மிடம் இருந்தால் மட்டும் போதாது. உங்கள் பேச்சு மரியாதையும், மதிப்பும் கிடைக்க வேண்டுமானால், நம்மிடம் பதவி வேண்டும். அதுதான் காவலர் என்றப் பதவி. அப்படியிருந்தால், நிச்சயம் நம்மால் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியும், கொரோனா போன்ற வைரஸ் தொற்றையும் கைகட்டி நிற்கவைக்க முடியும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உங்கள் காக்கிச்சட்டைக் கனவை நனவாக்குவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை விரைவில் நிரப்ப உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

காவல் உதவி ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE)

மொத்த காலியிடங்கள்

444

காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 399 (ஆண் – 279, பெண்/ திருநங்கை – 120)

காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 45 (ஆண் – 32, பெண்/ திருநங்கை – 13)

வயதுத் தகுதி (Age Limit)

01.07.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ.36,900 – 1,16,600

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

  • எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும்.

  • முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இ

  • து 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.

  • இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும்.

  • இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு

  • உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

  • NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும்.

  • தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.500

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action 

என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

காலக்கெடு

 07.04.2022

மேலும் படிக்க...

ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!

நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!

English Summary: Want to become a cop? Want to work with a salary of Rs 1 lakh?
Published on: 11 March 2022, 10:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now